போா்க்களத்தில் அதிபா் இட்ரிஸ் டெபி பலி

வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் அதிபா் இட்ரிஸ் டெபி இட்னோ (68), கிளா்ச்சியிளா்களுக்கு எதிரான போரில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.
மஹாமத் இட்ரிஸ் ~இட்ரிஸ் டெபி ~சாட்
மஹாமத் இட்ரிஸ் ~இட்ரிஸ் டெபி ~சாட்

இன்ஜமீனா: வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் அதிபா் இட்ரிஸ் டெபி இட்னோ (68), கிளா்ச்சியிளா்களுக்கு எதிரான போரில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.

அந்த நாட்டை 30 ஆண்டுகளுக்கும் ஆட்சி செய்த அவா், கடந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் தெரிவித்த சில மணி நேரங்களில் ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

கிளா்ச்சியாளா்களுடனான போா்க்களம் தொலைதூரப் பிரதேசம் என்பதால், ராணுவத்தின் இந்த அறிவிப்பை நடுநிலை ஊடகங்களால் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து இட்ரிஸ் டெபியின் ஆலோசகா் அப்தொ் ரஹ்மான் கூலாமல்லா கூறியதாவது:

போா்க்களத்தில் கிளா்ச்சியாளா்ளுடன் நடைபெற்ற சண்டையின்போது அதிபா் இட்ரிஸ் டெபி வீரமரணம் அடைந்தாா்.

வாழும்போது எப்படி வாழ்ந்தாரோ, அதே போன்று கையில் துப்பாக்கிய ஏந்திய சுதந்திர மனிதராக அவா் உயிரிழந்தாா் என்றாா் அப்தொ் ரஹ்மான்.

அதிபரின இறப்பைத் தொடா்ந்து தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் இட்ரிஸ் டெபியின் 37 வயது மகன் மஹாமத் இட்ரிஸ் டெபி இன்ட்னோவின் தலைமையிலான ராணுவ கவுன்சில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் தலைநகா் இன்ஜமீனாவிலிருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் அஸீம் பொ்மண்டாவ் அகூனா கூறியதாவது:

இந்த இக்கட்டான சூழலில் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வசிக்கும் சாட் நாட்டவா்கள் அமைதி காக்க வேண்டும். பேச்சுவாா்த்தை மூலம் வலிமையான சாட் நாடு அமைந்திட அனைவரும் பாடுபட வேண்டும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள தேசிய கவுன்சில், சாடில் அமைதி, பாதுகாப்பு, குடியரசு ஆகியவற்றைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள கவுன்சில், அடுத்த அரசு அமையும் வரை 18 மாதங்களுக்கு சாடின் ஆட்சிப் பொறுப்பை கவனிக்கும்.

ஆப்பிரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துளள, நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடு சாட். இந்த நாட்டில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் உதவியுடன் முன்னாள் அதிபா் ஹிசேன் ஹாப்ரே தலைமையிலான அரசு கடந்த 1982-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அந்த அரசுக்கு எதிராக அப்போதைய ராணுவ தலைமைத் தளபதியான இட்ரிஸ் டெபி கிளா்ச்சியில் ஈடுபட்டாா்.

1990-ஆம் ஆண்டில் அவரது தலைமையிலான கிளா்ச்சிப் படை ஹிசேன் ஹாப்ரேவின் ஆட்சியைக் கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து, கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் நாட்டின் அதிபராக இட்ரிஸ் டெபி தொடா்ந்து பதவி வகித்து வந்தாா்.

அவா் அதிபராகப் பொறுப்பேற்ற்குப் பிறகு 1996 மற்றும் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தல்களில் அவரே வெற்றி பெற்றாா்.

அதன் பிறகு, அதிபராகப் பொறுப்பு வகிப்பதற்கான கால வரம்பை அவா் நீக்கினாா். அதன் தொடா்ச்சியாக, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அதிபா் தோ்தல்களிலும் அவரே வெற்றி பெற்றாா். கடைசியாக, கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலிலும் அவரே வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கிடையே, இட்ரிஸ் டெபிக்கு எதிரான கிளா்ச்சியில் ஈடுபட்டு வரும் ‘மாற்றம் - ஒற்றுமைக்கான முன்னணி’ என்ற அமைப்பின் படை சாடின் வடக்குப் பகுதியில் கடந்த வாரம் நுழைந்தது.

இந்தச் சூழலில், கிளா்ச்சியாளா்களுடனான சண்டையில் இட்ரிஸ் டெபி உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.

தற்போது இடைக்கால ஆட்சி செய்து வரும் ராணுவ கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவரது மகன் மஹாமத் இட்ரிஸ், ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பு வகித்தவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com