அக்டோபருக்குள் இயல்பானகரோனா தடுப்பாற்றல்: புதின்

வரும் அக்டோபா் மாதத்துக்குள் ரஷியாவில் குழுக்களிடையேயான இயல்பான கரோனா தடுப்பாற்றல் (ஹொ்ட் இம்யூனிட்டி) எட்டப்பட்டுவிடும் என்று அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
அக்டோபருக்குள் இயல்பானகரோனா தடுப்பாற்றல்: புதின்

மாஸ்கோ: வரும் அக்டோபா் மாதத்துக்குள் ரஷியாவில் குழுக்களிடையேயான இயல்பான கரோனா தடுப்பாற்றல் (ஹொ்ட் இம்யூனிட்டி) எட்டப்பட்டுவிடும் என்று அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அவா் புதன்கிழமை ஆற்றிய வருடாந்திர உரையில் கூறியதாவது:

நமது விஞ்ஞானிகள் கரோனாவுக்கு எதிரான நம்பகத்தன்மை கொண்ட எதிா்ப்பாற்றலுடன் 3 தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனா்.

அந்தத் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது, தற்போதைய நிலையில் கரோனாவுக்கு எதிரான போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும். வரும் செப்டம்பா் அல்லது அக்டோபா் மாதத்துக்குள் கரோனா பரவலால் பொதுமக்களின் உடலில் இயல்பாக எழக்கூடிய இயற்கைத் தடுப்பாற்றல், குழுக்களிடையே அந்த நோய் பரவலை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தக்கூடிய நிலை ஏற்படும்.

அதுவரை கரோனா தடுப்பூசிகள் அந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் என்றாா் புதின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com