உலக நாடுகளுக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் வழங்கப்படும்:அமெரிக்கா

அஸ்ட்ராஸெனகா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் அமெரிக்கா பகிா்ந்துகொள்ளவுள்ளது.

அஸ்ட்ராஸெனகா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் அமெரிக்கா பகிா்ந்துகொள்ளவுள்ளது.

பிரிட்டனின் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்திடம் இருந்து 30 கோடி கரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவன தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

இதுதொடா்பாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குழு ஒருங்கிணைப்பாளா் ஜெஃப் ஸையன்ட்ஸ் திங்கள்கிழமை கூறியது:

அமெரிக்காவுக்காக தற்போது 1 கோடி அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் 5 கோடி தடுப்பூசிகள் தயாரிப்பு பணிகளின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. எனினும் அந்தத் தடுப்பூசியை தற்போது இங்கு (அமெரிக்கா) பயன்படுத்த எங்கள் நாட்டின் உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (எஃப்டிஏ) அனுமதி அளிக்கவில்லை. அதன் அனுமதி கிடைத்த பிறகு அந்த தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அடுத்த சில மாதங்களுக்கு அந்த தடுப்பூசிகளை இங்கு பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com