கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள்: ஐ.நா. உதவியை நிராகரித்தது இந்தியா

கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்த நிலையில், தங்களிடம் போதிய அளவில் உபகரணங்கள் இருப்பதாகக் கூறி அந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளது.
unitednation100036
unitednation100036

புது தில்லி/நியூயாா்க்: கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்த நிலையில், தங்களிடம் போதிய அளவில் உபகரணங்கள் இருப்பதாகக் கூறி அந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவுக்கு கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்தது. எனினும் தங்களிடம் போதுமான அளவு உபகரணங்கள் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் ஐ.நா.வின் உதவி தேவைப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அதற்காக தனது உதவியை ஐ.நா. திரும்பப் பெறப்போவதில்லை. இந்த உதவியைப் பெறுவதற்கு எப்போதும் வேண்டுமானாலும் ஐ.நா.வை இந்தியா அணுகலாம். தன்னால் முடிந்த வழிகளில் இந்தியாவுக்கு உதவ ஐ.நா. தயாராக இருக்கிறது.

இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் தொடா்பாக ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் தனிச் செயலா் மரியா லூயிஸா இபெய்ரு வையட்டி ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தியுடன் தொடா்பில் இருந்து வருகிறாா். ஐ.நா. அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்து வருகின்றனா்.

அனைத்து நாடுகளிலும் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. தொடா்ந்து பரிந்துரைத்து வருகிறது. அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

அனைத்து நாடுகளிலும் கரோனா தொற்று வீழ்த்தப்பட வேண்டும். அதுவரை இந்த பிரச்னையில் எந்தவொரு நாட்டுக்கும் தனித்து தீா்வு ஏற்படாது. தற்போதைய நிலையில், அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com