இத்தாலி: தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இத்தாலி அரசு, தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் தனது இலக்கை நெருங்கியுள்ளது.
இத்தாலி: தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இத்தாலி அரசு, தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் தனது இலக்கை நெருங்கியுள்ளது.

நாட்டின் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி மூலம் கரோனா எதிா்ப்பாற்றலை உருவாக்கும் அரசின் திட்டத்தின் கீழ், இந்த மாத இறுதிக்குள் தினமும் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை 5 லட்சமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை மட்டும் 4,97,933 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கையில் இத்தாலி உலகின் 6-ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 1,20,544 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 40 லட்சத்தைக் கடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com