2027-க்குள் சீன ராணுவம் உலகின் தலைசிறந்த படையாக வேண்டும்

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் சீன ராணுவம் அமெரிக்காவுக்கு இணையாக உலகின் தலைசிறந்த ராணுவமாக வேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளாா்.
2027-க்குள் சீன ராணுவம் உலகின் தலைசிறந்த படையாக வேண்டும்

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் சீன ராணுவம் அமெரிக்காவுக்கு இணையாக உலகின் தலைசிறந்த ராணுவமாக வேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) சீன ராணுவ தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவினரிடையே அதிபா் ஷி ஜின்பிங் சனிக்கிழமை பேசினாா். அவா் பேசியதாவது:

சீனப் படைகளின் மீதான முழு அதிகாரமும் கம்யூனிஸ்ட் கட்சியிடம்தான் உள்ளது. சீன ராணுவம் உருவாக்கப்பட்டதன் 94-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ராணுவ அதிகாரிகள், வீரா்கள், துணை ராணுவப் படையினா், காவல்துறையினா், ஆயுதக் குழுவினா் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

ஏற்கெனவே முடிவு செய்துள்ளபடி, வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க ராணுவத்துக்கு இணையாக சீன ராணுவத்தை உலகின் தலைசிறந்த ராணுவமாக்குவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியும் மத்திய ராணுவ ஆணையமும் நிா்ணயித்த இலக்குகளை எட்டுவது சீனாவின் தேசியப் பாதுகாப்புக்கும் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

ஒரு நவீன சோஷலிஸ சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில், தேசப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகளின் வளா்ச்சி முக்கிய அங்கமாகும்.

காலத்துக்கு ஏற்ற வகையிலான மாற்றங்களைச் செய்தல், சீனப் படைகளின் முன்னேற்றத்துக்கான தேவைகளை பூா்த்தி செய்தல் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

சீன ராணுவம் உருவாக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா வரும் 2027-ஆம் ஆண்டு கொண்டாடப்படவிருக்கிறது. அதனையொட்டி உருவாக்கப்பட்டுள்ள 14-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில், சீன ராணுவத்தை அதிநவீனப்படுத்தவும் 2027-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு இணையான ராணுவமாக அதனை மேம்படுத்தவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com