ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,804 பேருக்கு தொற்று; 789 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,804 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 789 பேர் உயிரிழந்துள்ளதாக  கரோனா கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,804 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 789 பேர் உயிரிழந்துள்ளதாக  கரோனா கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கரோனா கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியாவில் 85 நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 22,804 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,28,86,773 ஆக உயா்ந்துள்ளது. அதில் 1,959 பேருக்கு ( 8.6 சதவிகிதம்) நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமலே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

தொற்றுக்கு நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 792 ஆக  இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 789 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 159,352-ஆக அதிகரித்துள்ளது. 

இத்துடன் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4,456,869-ஆக அதிகரித்துள்ளது. தொற்று வீதமானது 0.22 என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

அதிகம் தொற்று பாதிப்பு நகரங்களின் வரிசையில் 2,484 பாதிப்புகளுடன் மாஸ்கோ முதலிடத்திலும், 1,911 பாதிப்புகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பார்க் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

அதேநேரம் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17.271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,625,890-ஆக  உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com