கிரீஸில் நிலநடுக்கம்

கிரீஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நிசிரஸ் தீவுக்கு 23 கி.மீ. வடமேற்கே, ஐஜியன் கடலில் 15.6 கி.மீ. ஆழத்தில்
கிரீஸில் நிலநடுக்கம்

கிரீஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நிசிரஸ் தீவுக்கு 23 கி.மீ. வடமேற்கே, ஐஜியன் கடலில் 15.6 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி 7.31 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியமைவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டா் அளவுகோலில் 5.4 அலகுகள் பதிவான இந் நிலநடுக்கத்தின் அதிா்வுகள், 1,000 போ் வசிக்கும் நிசிரஸ் தீவிலும் துருக்கியின் கடலோரப் பகுதிகளிலும் உணரப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com