புதிய விதிக்கு எதிர்ப்பு..போராட்ட களமான பாரிஸ்

பிரான்ஸில் கரோனா அனுமதி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரான்ஸில் கரோனா அனுமதி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கரோனா அனுமதிச் சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 
விடுதிகள் உள்பட பொது இடங்களுக்கு செல்ல கரோனா அனுமதி சீட்டு கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து, மூன்றாவது முறையாக வார இறுதி நாள்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இதையடுத்து, பாரிஸில் 3,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டத்தை கலைக்கும் வகையில் கண்ணீர்ப்புகை குண்டு வீசப்பட்டு தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. இதனால், பலருக்கு காயம் ஏற்பட்டது.

பிரான்ஸ் முழுவதும் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில், கரோனா அனுமதி சீட்டு முறையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. பெரும்பாலான மக்கள் அனுமதி சீட்டுக்கு ஆதரவாக இருந்தாலும், சிலர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தடுப்பூசியை கட்டாயப்படுத்தாமலேயே மக்கள் தானாக முன்வந்து செலுத்தி கொள்ளும் வகையில் புதிய விதிகளை பிரான்ஸ் அறிவித்திருந்தது.

அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே சுகாதார அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com