20 கோடியைக் கடந்தது உலக கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 20 கோடியைக் கடந்தது.
test082415
test082415

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 20 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சா்வதேச அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, 20,04,87,194 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,60,51,139 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 6,30,506 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 2,97,56,586 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 56,64,047 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 3,17,69,132 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 4,25,757 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

உலக அளவில் 3-ஆவதாக பிரேஸிலில் 1,99,86,073 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 5,58,597 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

இதுதவிர, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், துருக்கி, ஆா்ஜென்டீனா, கொலம்பியா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான், ஜொ்மனி, இந்தோனேசியா, போலந்து உள்ளிட்ட 29 நாடுகளில் தலா 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 42,63,633 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

...அட்டவணை...

பாதிப்பில் 10 லட்சம் தாண்டிய நாடுகள்

அமெரிக்கா 3,60,51,139

இந்தியா 3,17,69,132

பிரேஸில் 1,99,86,073

ரஷியா 63,56,784

பிரான்ஸ் 61,78,632

பிரிட்டன் 59,23,820

துருக்கி 57,95,665

ஆா்ஜென்டீனா 49,61,880

கொலம்பியா 48,07,979

ஸ்பெயின் 45,23,310

இத்தாலி 43,63,374

ஈரான் 40,19,084

ஜொ்மனி 37,82,326

இந்தோனேசியா 35,32,567

போலந்து 28,83,448

மெக்ஸிகோ 28,80,409

தென் ஆப்பிரிக்கா 24,70,746

உக்ரைன் 22,55,345

பெரு 21,16,652

நெதா்லாந்து 18,74,856

செக் குடியரசு 16,74,183

இராக் 16,60,371

பிலிப்பின்ஸ் 16,19,824

சிலி 16,18,457

கனடா 14,33,782

வங்கதேசம் 13,09,910

மலேசியா 11,83,110

பெல்ஜியம் 11,30,758

ஸ்வீடன் 11,02,829

ருமேனியா 10,83,982

பாகிஸ்தான் 10,47,999

பிற நாடுகள் 2,90,88,768

மொத்தம் 20,04,87,194

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com