டோக்கியோவை மிரட்டவரும் புயல்..ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுபெறுமா?

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவை புயல் தாக்க வாய்ப்பிருக்கிறது என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவை புயல் தாக்க வாய்ப்பிருக்கிறது என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. கடந்த ஜூலை 23ஆம் தேதி, தொடங்கிய போட்டிகள் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறைவுபெறவுள்ளது. 

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவை புயல் தாக்க வாய்ப்பிருக்கிறது என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளான ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மதியம் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கிழக்கு கடற்கரையில் பலத்த காற்றுடன் கூடிய உயர்ந்த அலைகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை ஏற்படுவும் வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் நிறைவு விழா உள்பட வாட்டர் போலோ, தாள ஜிம்னாஸ்டிக்ஸ்
ஆகிய போட்டிகள் உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலைதான் நடைபெறவுள்ளது. அதேபோல், தென்மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிசுவோகாவில் சைக்கிள் டிராக் பந்தயமும் நகரின் வடதிசையில் உள்ள சப்போரோவில் ஆடவருக்கான மாரத்தான் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஏற்பாட்டாளர் கமிட்டியின் செய்தித் தொடர்பானர் கூறுகையில், "புயல் எந்த திசையில் செல்கிறது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவனித்துவருகிறோம். எந்த பாரபட்சமுமின்றி இதுகுறித்து தகவல் வெளியிடுவது அவசியமாகிறது. எனவே, அதிகப்படியான எதிர்வினைகளை தவிர்க்கலாம்" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com