உச்ச நீதிமன்ற நீதிபதியை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை சொல்லி திட்டிய பிரேசில் அதிபர்

உச்ச நீதிமன்ற நீதிபதியை பிரேசில் அதிபர் ஜெயர் பொல்சொனாரோ அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை சொல்லி திட்டியுள்ளார்.
ஜெயர் பொல்சொனாரோ
ஜெயர் பொல்சொனாரோ

உச்ச நீதிமன்ற நீதிபதியை பிரேசில் அதிபர் ஜெயர் பொல்சொனாரோ அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை சொல்லி திட்டியுள்ளார்.

வலதுசாரியான பிரேசில் அதிபர் ஜெயர் பொல்சொனாரோவுக்கும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே பனிப்போர் நிலவிவருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையைக் கூறி பொல்சொனாரோ திட்டியுள்ளார்.

தெற்கு பிரேசிலில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பொல்சொனாரோ, உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் ராபர்டோ பரோசோவை அவமதிக்கும் விதமாக பேசினார். இது பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. இருப்பினும், பதிவு தொடர்ந்து பகிரப்பட்டது.

பொல்சொனாரோவின் விமர்சனத்திற்கு பதில் அளித்து பேசிய லூயிஸ், "என்னுடைய நடவடிக்கைகள் சிலருக்கு தொந்தரவாக இருந்தால் என்னுடைய பணியை சரியாக செய்கிறேன் என அர்த்தம்" என்றார்.

கடந்த பல வாரங்களாகவே, தேர்தலில் பயன்படுத்தப்பட்டுவரும் மின்னணு இயந்திரங்கள் குறித்து பொல்சொனாரோ கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். அதுமட்டுமின்றி, வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சம் பொல்சொனாரோவுக்கு உள்ளதாகவும் எனவேதான் அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்பை போல் இதுபோன்ற சந்தேகங்களை எழுப்பிவருகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com