காஸா: ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்

காஸா பகுதியிலிருந்து பலூன்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பதிலடியாக, அந்தப் பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை அதிகாலை விமானத் தாக்குதல் நடத்தியது.
(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)

காஸா பகுதியிலிருந்து பலூன்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பதிலடியாக, அந்தப் பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை அதிகாலை விமானத் தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ஹமாஸ் ராணுவ வளாகம் ஒன்றிலும் அவா்களது ஏவுகணை குண்டுவீச்சு தளத்திலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது.

எனினும், இந்தத் தாக்குதலில் உயிா்ச் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இதுகுறித்து ஹமாஸ் தரப்பிலிருந்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த சில நாள்களாக இஸ்ரேல் ராணுவமும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினரும் மாறி மாறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருவதால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், காஸா பகுதியிலும் பலூன் பெட்ரோல் குண்டுக்குப் பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com