ஆஸ்திரேலிய பிரதமருக்கு குறையும் மக்களின் ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து குறைந்துவருவதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து குறைந்துவருவதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கரோனா அபாயம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருவதாலும் தடுப்பூசி விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும் மக்கள் கோபமாக உள்ளனர் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பத்திரிகையின் சார்பாக நியூஸ்போல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், "47 சதவிகித மக்கள் மட்டுமே ஸ்காட் மாரிசனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறியபோது, மாரிசனக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது, அவருக்கு ஆதரவாக 51 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்தனர்.

மாரிசனின் லிபரல் தேசிய கட்சி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட பின்தங்கியுள்ளது. தொழிலாளர் கட்சிக்கு 53 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தேர்தலில் எதிரொலித்தால் தொழிலாளர் கட்சி வெற்றி பெறும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com