ஹைட்டி அதிபா் தோ்தல் ஒத்திவைப்பு

கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஹைட்டி அதிபா் தோ்தல் ஒத்திவைப்பு

கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த நாட்டின் தோ்தல் கவுன்சில் செய்தித் தொடா்பாளா் ரிச்சா்ட் டியூமேல் கூறியதாவது:

அடுத்த மாதம் 28-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிபா் தோ்தல் வரும் நவம்பா் மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

9 உறுப்பினா்களைக் கொண்ட தோ்தல் கவுன்சில் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். எனினும், தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை அவா் கூறவில்லை.

அதிபா் ஜோவனேல் மாய்ஸ் (53) அவரது இல்லத்தில் கடந்த மாதம் 7-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா். இந்தத் தாக்குதலில் அவரது மனைவி மாா்டினா மாய்ஸ் காயமடைந்தாா்.

இந்தப் படுகொலை தொடா்பாக கொலம்பியா ராணுவத்தின் முன்னாள் வீரா்கள் 15 போ், அமெரிக்க குடியுரிமை பெற்ற 2 ஹைட்டி நாட்டவா்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா், காவல் துறையினா், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com