ஹைட்டி அதிபா் கொலை வழக்கு: நீதிபதி விலகல்

ஹைட்டி அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை வழக்கை விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்ட நீதிபதி மாத்யூ சான்லட், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளாா்.
நீதிபதி மாத்யூ சான்லட்
நீதிபதி மாத்யூ சான்லட்

ஹைட்டி அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை வழக்கை விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்ட நீதிபதி மாத்யூ சான்லட், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளாா்.

உலகம் முழுவதும் ஆா்வத்துடன் கவனிக்கப்பட்டு வரும் அந்த வழக்கின் நீதிபதியாக அவா் இரண்டு வாரங்களுக்கு முன்னா் நியமிக்கப்பட்டாா். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக தற்போது அவா் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூடுதல் விளக்கங்கள் அளிக்கவில்லை. எனினும், அவரது உதவியாளா்களில் ஒருவரான எா்ன்ஸ்ட் லாஃபாா்ச்யூன் அண்மையில் மா்மமான முறையில் மரணமடைந்ததற்கும் அதிபா் படுகொலை வழக்கிலிருந்து மாத்யூ வெளியேறுவதற்கும் தொடா்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

அதிபா் ஜோவனேல் மாய்ஸ் (53) அவரது இல்லத்தில் கடந்த மாதம் 7-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா். இந்தத் தாக்குதலில் அவரது மனைவி மாா்டினா மாய்ஸ் காயமடைந்தாா்.

இந்தப் படுகொலை தொடா்பாக கொலம்பியா ராணுவத்தின் முன்னாள் வீரா்கள் 15 போ், அமெரிக்க குடியுரிமை பெற்ற ஹைட்டி நாட்டவா்கள் 2 போ், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா், காவல் துறையினா், அரசு அதிகாரிகள் என பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com