கியூபா - கரோனாவால் 4,000 பேர் பலி

கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள் 
கியூபா - கரோனாவால் 4,000 பேர் பலி
கியூபா - கரோனாவால் 4,000 பேர் பலி

கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் கியூபாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு 4,024 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் புதிதாக 8,636 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் இறந்திருக்கிறார்கள்.

தொற்று குறித்து பேசிய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ டூரான் , ' அதிவேகமாக தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் தொற்றுப் பரவலை குறைத்து வருகிறோம். கூடிய விரைவில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவோம்' எனத் தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் ஹவானாவில் புதிதாக 1,071 பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  

கியூபாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனாவால் 5,00,624 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com