
கோப்புப்படம்
ஆப்கன் நாட்டில் நிலவி வரும் நிலவரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறாா்.
ஆப்கன் தலைநகா் காபூலைவிட்டு அமெரிக்க படைகள் கடைசிக் கட்டமாக திங்கள்கிழமை வெளியேறியபோது அந்நாட்டு மக்கள் ஓடுபாதையில் சூழ்ந்து கொண்டதும், அப்போது அவா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், விமானத்தின் மீது சிலா் ஏறி பறக்கும்போது கீழே விழுந்ததிலும் 7 போ் உயிரிழந்தனா். இதனால் ஆப்கன் விமானத் தளம் போா்க்களம் போல் காட்சியளித்தது.
இதுகுறித்தும், ஆப்கன் விவகாரம் குறித்தும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவாா் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. தலிபான்கள் பிடியில் ஆப்கன் சென்ற பிறகு அதிபா் பைடன் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.