தலிபான்களை எதிர்கொள்வது எப்படி? ஆலோசனையில் ஈடுபடும் ஜி-7 நாடுகள்

தலிபான்கள் பிரச்னை குறித்து விவாதிக்கும் வகையில், ஜி 7 நாடுகளின் மாநாடு இந்த வாரம் கூட்டப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தலிபான்கள் பிரச்னை குறித்து விவாதிக்கும் வகையில், ஜி 7 நாடுகளின் மாநாடு இந்த வாரம் கூட்டப்படவுள்ளது.

மற்ற நாடுகளுடன் அமைதியான வழியில் சுமூகமான உறவை ஏற்படுத்தவே விரும்புகிறோம் என தலிபான்கள் நேற்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தனர். அதேபோல், இஸ்லாமிய சட்டத்தின்படி, பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் தலிபான் அமைப்பு காபூலை கைப்பற்றிய பிறகு நடத்தப்பட்ட முதல் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆட்சியை போல் அல்லாமல் மென்மையான போக்கே கையாளப்படும் என்பது போல தலிபான்களின் அறிவிப்பு அமைந்தது. இருப்பினும், தங்கள் நாட்டு தூதர்களையும் மக்களையும் விமானம் மூலம் மீட்கும் பணியை அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "எங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிரிகளை வைத்து கொள்ள விருப்பமில்லை. படிக்கவும் வேலைக்கு செல்வதற்கும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும்" என்றார்.  

இதுவரை, 1,100 அமெரிக்கர்கள் மீட்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அலுவலர் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு, கைது செய்யப்பட்ட தலிபான் அமைப்பின் நிறுவனர்களின் ஒருவரான முல்லா அப்துல் கானி பராதார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ளார்.

2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பராதார், அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வைக்கும் வகையில் 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ட்ரம்பின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். 

இந்நிலையில், தலிபான்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்ய ஜி-7 நாடுகளின் மாநாடு இந்த வாரம் இணைய வழியில் கூட்டப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com