குறையும் மக்கள்தொகை...சீனாவின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல்

மக்கள் தொகையை உயர்த்தும் வகையில் மூன்று குழந்தை திட்டத்திற்கு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்கள்தொகையை உயர்த்தும் வகையில் மூன்று குழந்தை திட்டத்திற்கு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள சீனாவில் பிறப்பு விகிதம் தொடர் சரிவை சந்தித்துள்ளது. மக்கள்தொகையை அதிகப்படுத்தும் வகையில் மூன்று குழந்தைகள் திட்டத்தை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு சீனா தேசிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மக்கள்தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, சீனர்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சட்ட திருத்தத்தை நாடாளுமன்ற நிலைக்குழு நிறைவேற்றியுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொண்டால் அவர்களை வளர்ப்பதற்கான செலவை கண்டு சீனர்கள் தயக்கம் காட்டிவந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் சீனர்களுக்கு சமூக மற்றும் பொருளார உதவிகள் வழங்க சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிதி, வரி, காப்பீடு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலவற்றில் சலுகைகள் வழங்கப்படும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் வளர்ப்புக்கான செலவு குறைக்கப்படும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகள் வரை பெற்று கொள்ளும் சட்டத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ளலாம் என சீனா கம்யூனிஸ்ட் கட்சி மே மாதம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக, 2016ஆம் ஆண்டுவரை, ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ள சீனாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com