நியூசிலாந்து : ஆகஸ்ட் - 24 வரை ஊரடங்கு நீட்டிப்பு

நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் 3 நாள் பொதுமுடக்கத்தை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்திருந்தார்
நியூசிலாந்து : ஆகஸ்ட் - 24  வரை ஊரடங்கு நீட்டிப்பு
நியூசிலாந்து : ஆகஸ்ட் - 24 வரை ஊரடங்கு நீட்டிப்பு

நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் 3 நாள் பொதுமுடக்கத்தை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்திருந்த நிலையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து நாட்டில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த 6 மாதங்களாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டின் ஆக்லாந்து பகுதியில் வசித்துவந்த 58 வயதான நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக - 17) முதல் மூன்று நாள் ஊரடங்கை அறிவித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் வரும் ஆகஸ்ட்- 24 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

நான்காம் நிலை ஊரடங்கு என்பதால் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கடைகளும்  இயங்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com