தொடரும் தலிபான்களின் அட்டூழியம்: பத்திரிகையாளரின் உறவினர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றின் பத்திரிகையாளரை தேடி சென்ற தலிபான்கள் அவரது உறவினரை கொலை செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றின் பத்திரிகையாளரை தேடி சென்ற தலிபான்கள் அவரது உறவினரை கொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் டாய்ச் வெல்லே நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் பத்திரிகையாளரை தேடி சென்ற தலிபான்கள், அவரது உறவினரை சுட்டு கொலை செய்துள்ளதாக ஜெர்மன் ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் செய்தி நிறுவனமான டாய்ச் வெல்லேவில் பணிபுரிந்துவரும் பத்திரிகையாளரை தலிபான்கள் வீடு வீடாக சென்று தேடியுள்ளனர். அப்போது, அவரது உறவினர் ஒருவரை சுட்டு கொலை செய்துள்ளனர் மற்றொரு உறவினருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மற்றவர்கள் அனைவரும் தப்பித்துள்ளனர் என ஜெர்மன் ஒளிபரப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. பத்திரிகையாளரின் உறவினர் கொல்லப்பட்டதற்கு டாய்ச் வெல்லே நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் லிம்பர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "எங்களின் ஆசிரியர் ஒருவரின் உறவினரை தலிபான்கள் நேற்று கொலை செய்திருப்பது நினைத்துப் பார்க்க முடியாத துயரம். ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் எவ்வளவு ஆபத்தான சூழலில் வாழ்ந்துவருகிறார்கள் என்பது இதன்மூலம் தெரியவருகிறது" என்றார்.
  
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு உதவி செய்தவர்களை தேடி தலிபான்கள் வீடு வீடாக சோதனை நடத்துவதாக ஐநா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com