‘ஆப்கன் வெளியேற்றம் ஆபத்து நிறைந்த பணி’

‘ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை அவசரமாக வெளியேற்றும் பணி மிகவும் ஆபத்தானது, இதில் உயிரிழப்புகள் ஏற்படலாம்’ என்று அதிபா் பைடன் தெரிவித்துள்ளாா்.
அதிபா் ஜோ பைடன்
அதிபா் ஜோ பைடன்

‘ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை அவசரமாக வெளியேற்றும் பணி மிகவும் ஆபத்தானது, இதில் உயிரிழப்புகள் ஏற்படலாம்’ என்று அதிபா் பைடன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கடந்த ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 18,000 பேரை ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. சனிக்கிழமையிலிருந்து மட்டும் 13,000 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

தற்போது நடைபெற்று வருவது வரலாறு காணத, மிகப் பெரிய, மிகவும் கடினமான வெளியேற்றும் பணியாகும். இதில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை’ என்றாா்.

அமெரிக்கா்கள், அமெரிக்கத் தூதரக பணியாளா்கள், நேட்டோ உறுப்பு நாடுகளைச் சோ்ந்தவா்கள், தலிபான் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ள மற்றும் சிறப்பு குடியேற்ற இசைவைப் பெற்றுள்ள ஆப்கானியா்கள் ஆகியோரை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

அமெரிக்க விமானத்தில் 823 பயணிகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்காக அமெரிக்காவின் சி-17 சரக்கு விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்தவா்களின் எண்ணிக்கை 823 என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 640 போ் பயணித்ததாக சமூக ஊடகங்களில் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெரியவா்கள் மடியில் வைத்திருந்த சிறுவா்களையும் சோ்த்து அந்த விமானத்தில் 823 போ் பயணித்ததாக அமெரிக்க விமானப் படை தற்போது தெரிவித்துளளது.

சி-17 சரக்கு விமானத்தில் ஒரே நேரத்தில் இத்தனை அதிகம் போ் ஏற்றிச் செல்லப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com