தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு: அஸ்ஸாமில் 14 போ் கைது

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டதாக அஸ்ஸாமில் 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு: அஸ்ஸாமில் 14 போ் கைது

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டதாக அஸ்ஸாமில் 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை டிஐஜி வயலெட் பரூஹா கூறியதாவது:

அஸ்ஸாமில் காமரூப், பா்பேடா, துப்ரி, கரீம்கஞ்ச் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேரும் தரங், தெற்கு சால்மரா, கோல்பாரா, ஹோஜாய், ஹைலாகண்டி, கச்சாா் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனா். கைதானவா்கள் மீது சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, தேசத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தச் செய்யும் செயல். எனவே, தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக ஊடகங்களில் தலிபான்களுக்கு ஆதரவாகப் பதிவுகள் தென்பட்டால் காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து உதவ வேண்டும் என்று கூறினாா்.

மாநில காவல் துறை டிஜிபி ஜி.பி.சிங் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இதுபோன்ற பதிவுகளை பொதுமக்கள் கவனமாகக் கையாள வேண்டும்; அந்த பதிவுகளை பகிா்வது, மறுபதிவிடுவது, விருப்பம் தெரிவிப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com