மனிதக் குரங்கைக் காதலித்த பெண்! நடவடிக்கை எடுத்த உயிரியல் பூங்கா நிர்வாகம்

பெல்ஜியம் நாட்டில் வனவிலங்குப் பூங்காவில் உள்ள மனிதக் குரங்குடன் காதல்வயப்பட்ட பெண்ணிற்கு பூங்கா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
மனிதக் குரங்குடன் காதல்: பெண்ணுக்கு அனுமதி மறுத்த உயிரியல் பூங்கா
மனிதக் குரங்குடன் காதல்: பெண்ணுக்கு அனுமதி மறுத்த உயிரியல் பூங்கா

பெல்ஜியம் நாட்டில் வனவிலங்குப் பூங்காவில் உள்ள மனிதக் குரங்குடன் காதல்வயப்பட்ட பெண்ணிற்கு பூங்கா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள வனவிலங்குப் பூங்காவிற்கு அடிய் திம்மெர்மன்ஸ் என்ற  பெண் அடிக்கடி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அவர் வனவிலங்கு ஆர்வலராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அந்தப் பூங்காவில் உள்ள 38 வயதான மனிதக் குரங்குடன் அப்பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக காதல் வயப்பட்டுள்ளார். வாரம்தோறும் வனவிலங்கு பூங்காவிற்கு செல்லும் பெண், அக்குரங்குடன் அதிக நேரம் செலவிட்டுள்ளார். 

மனிதக் குரங்குடன் நேரம் செலவிடும் பெண்
மனிதக் குரங்குடன் நேரம் செலவிடும் பெண்

கண்ணாடிக்கு மறுபுறம் இருக்கும் குரங்கும் அப்பெண்ணுடன் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதையே விரும்புகிறது. இருவரும் அதிக நேரம் பேசி ஒருவரையொருவர் முத்தங்களையும் பரிமாறிக்கொண்டுள்ளனர். 

இதனைப் பூங்கா நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கண்காணித்து வந்த வனவிலங்குப் பூங்கா நிர்வாகம் அப்பெண்ணுக்கு அனுமதி மறுத்துள்ளது.

சீட்டா என்ற அந்த மனிதக் குரங்கு, பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் மற்ற மனிதக் குரங்குகளிடமிருந்து தனித்து இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

மற்ற மனிதக் குரங்குகளுடன் சேராது தனித்திருக்கும் சீட்டா எனும் மனிதக்குரங்கு
மற்ற மனிதக் குரங்குகளுடன் சேராது தனித்திருக்கும் சீட்டா எனும் மனிதக்குரங்கு

இது தொடர்பாக அப்பெண் பேசியதாவது, ''நான் அந்த மனிதக் குரங்கை காதலிக்கிறேன். அவனும் என்னை விரும்புகிறான். ஏன் அவனை என்னிடமிருந்து பிரிக்கின்றனர். காதலின் வாயிலாக எங்களது உணர்வுகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. நாங்கள் பரஸ்பரம் காதல் வயப்பட்டுள்ளோம்'' என்று கூறினார். 

உயிரியல் பூங்கா நிர்வாகத்தினரால் அனுமதி மறுக்கப்பட்ட அடிய் திம்மெர்மன்ஸ்
உயிரியல் பூங்கா நிர்வாகத்தினரால் அனுமதி மறுக்கப்பட்ட அடிய் திம்மெர்மன்ஸ்

வனவிலங்குப் பூங்கா தரப்பில் பேசிய அதிகாரிகள், ''மனிதர்களை மட்டுமே அந்த மனிதக் குரங்கு கவனிக்கத் தொடங்கியுள்ளது. மற்ற மனிதக் குரங்குகளுடன் சீட்டா நேரம் செலவிடுவதில்லை. இதனால் மற்ற மனிதக் குரங்குகளாலும் சீட்டா ஒதுக்கிவைக்கப்படுகிறது. சீட்டா மற்ற மனிதக் குரங்குகளைப் போன்று இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதனால் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com