7,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் டிஎன்ஏவில் புதிய மனித மரபணு கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தோனேசியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணுவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படாத இந்த மனித மரபணு, தனித்துவமானது என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு சுலாவேசியில் சுண்ணாம்பு குகையில் கண்டெடுக்கப்பட்ட 17 அல்லது 18 வயது இளம் பெண்ணின் எலும்புகள் ஒப்பிட்டளவில் சேதமாகாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் குழந்தை படுத்திருப்பது போன்ற நிலையில் அப்பெண் புதைக்கப்பட்டிருக்கிறாள்.

வேட்டையாடி வாழ்ந்த டோலியன் மக்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களிலிருந்து இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெற்கு சுலாவேசி பகுதியின் முதல் நாகரிகமாக டோலியன் மக்கள் கருதப்படுகின்றனர். 2015ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஆடம் ப்ரூம் இதுகுறித்து கூறுகையில், "ஆசியாவின் முக்கிய நிலபரப்புக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய தீவு பகுதியில் முதல்முறையாக இம்மாதிரியாக பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரப்பதமான வெப்ப மண்டலங்களில் பண்டைய கால மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிப்பது அரிதான ஒன்று. எனவேதான், இதை மிகவும் அதிர்ஷ்டமான கண்டுபிடிப்பாக கருதுகிறேன்" என்றார். 

வெப்ப மண்டல வானிலையில் டிஎன்ஏக்கள் எளிதாக அழுகுவிடும் என்பதால் இங்கு அகழ்வாராய்ச்சிகள் நடத்துவது மிகவும் சவால் நிறைந்ததாக கருதப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com