ஒமைக்ரான் அச்சுறுத்தல்: பிரிட்டனில் முகக் கவசம் கட்டாயம்

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், கடைகள், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் முகக் கவசம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Mask compulsory
Mask compulsory

லண்டன்: பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், கடைகள், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் முகக் கவசம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தீநுண்மி மிக ஆபத்தான வகையைச் சோ்ந்ததாக உலக சுகாதார அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் இதுவரை ஒமைக்ரான் தீநுண்மி தொற்றால் 22 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள், தபால் நிலையங்கள், முடி திருத்தகங்கள், பொதுப் போக்குவரத்து போன்றவற்றில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பிரதமா் போரிஸ் ஜான்சன் கூறுகையில், புதிய வகை தீநுண்மி தொற்றுப் பரவலை குறைப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்றாா்.

பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமையின் தலைமை நிா்வாகி ஜென்னி ஹாரிஸ், உலகில் பல நாடுகளில் ஒமைக்ரான் தீநுண்மி பரவுவதைப்போல பிரிட்டனிலும் வரும் நாள்களில் பரவக்கூடும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com