ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை!

மியான்மர் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளர், தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியது நீதிமன்றம்.
ஆங் சான் சூகி
ஆங் சான் சூகி

மியான்மர் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளர், தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியது நீதிமன்றம்.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசடி எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பின் ,ஆட்சியாளர்கள் ராணுவத்திற்கு எதிரான தலைவர்களை கைது செய்யத் தொடங்கினார்கள்.

முக்கியமாக ஆங் சான் சூகி உள்ளிட்ட சில தலைவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள்.

இந்த வழக்கு விசாரணை 8 மாதமாக நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில்   இன்று ராணுவத்திற்கு எதிராக கருத்துகளை பரப்பியதற்காகவும் , கரோனா விதிமுறைகளை மீறியதற்காகவும் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com