இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிறதா கரோனா தடுப்பூசிகள்? ஆய்வுகள் கூறுவது என்ன?

ஆஸ்ட்ரஜெனகா, ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் முதல் டோஸ்களை செலுத்தி கொள்வதால் இதய பாதிப்புக்கான அபாயம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதால் அரிய வகை இதய பாதிப்பு ஏற்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், கரோனா பாதிப்புக்கு பிறகு ஏற்படும் இந்த இதய பாதிப்பு, தடுப்பூசி செலுத்தி கொள்வதால் ஏற்படும் இதய பாதிப்பை காட்டிலும் குறைவு என சமீபத்திய வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்ட்ரஜெனகா, ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் முதல் டோஸ்களை செலுத்தி கொள்வதால் மயோகார்டிடிஸ் (இதய எலும்புகளை பலவீனப்படுத்தும் நோய்) ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல், மாடர்னா இரண்டாம் டோஸ் காரணமாகவும் மயோகார்டிடிஸ் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு ஆர்என்ஏ தடுப்பூசிகள் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே ஆபத்தை அதிகரித்தன. கரோனாவுக்கு பிறகு மயோகார்டிடிஸால் பாதிக்கப்படுவோர் நான்கு மடங்கு அதகரித்துள்ளனர் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசியால் மோசமான பின்விளைவுகள் ஏற்படுவது அரிதான சம்பவமாக இருக்கிறது. இருப்பினும், பிரிட்டனில் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில் இது முட்டுகட்டையாக உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ தொற்றுநோயியல் பேராசிரியராக பணிபுரிந்துவரும் ஜூலியா ஹிப்பிஸ்லி-காக்ஸ் இதுகுறித்து கூறுகையில், "கடுமையான விளைவுகளின் அபாயங்களைக் குறைப்பதில் கரோனா தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

எவ்வாறாயினும், தடுப்பூசிகளால் ஏற்படும் அரிதான பின்விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதும் கண்டறிவதும் முக்கியம். அதை எப்படி பார்க்க வேண்டும், தொடக்கத்திலேயே எப்படி நோயை கண்டறிய வேண்டும், எடுக்கப்படும் முடிவுகள் குறித்து எப்படி தெரிவிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

பிரிட்டன் முழுவதும் 16 வயதுக்கு மேலாக உள்ள 38 மில்லியன் மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி செலுத்தி கொண்ட 28 நாள்களில் இதய பாதிப்பு ஏற்படுகிறதா, கரோனா பாதிப்புக்கு பிறகு இதய பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறுது.

தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு, ஒரு மில்லியன் மக்களில் 1 முதல் 10 பேர் வரை மாரடைப்பு நோய் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால், கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு மில்லியன் பேரில் 40 பேருக்கு மாரடைப்பு ஏற்படுவது தெரியவவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com