ஹைட்டி பெட்ரோல் லாரி வெடிவிபத்து: பலி 75-ஆக உயா்வு

கரீபியன் கடல் பகுதி நாடான ஹைட்டியில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 75-ஆக உயா்ந்துள்ளது.
பெட்ரோல் லாரி வெடிவிபத்தில் எரிந்துபோன வீடுகள்.
பெட்ரோல் லாரி வெடிவிபத்தில் எரிந்துபோன வீடுகள்.


போா்ட் ஆ-பிரின்ஸ்: கரீபியன் கடல் பகுதி நாடான ஹைட்டியில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 75-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது கூறியதாவது:

கேப் ஹைட்டியன் நகரில் பெட்ரோல் ஏற்றி திங்கள்கிழமை வந்துகொண்டிருந்த லாரி, விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மோட்டாா் சைக்கிளில் மோதுவதைத் தவிா்ப்பதற்காக லாரியை ஓட்டுநா் வேகமாகத் திருப்பியதாகவும், அதில் அந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தைக் கண்ட பலா், லாரியிலிருந்து வழிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அங்கு குவிந்தனா். அப்போது அந்த லாரியிலிருந்த எரிபொருள் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் 75 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில், அருகிலிருந்த 50 வீடுகளும் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பற்றாக்குறையில் ஹைட்டி சிக்கித் தவித்து வரும் சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com