ஆப்கனிலிருந்து 200 பேரை விமானங்களில் அழைத்துச் சென்றது ரஷியா

ரஷியா தனது ராணுவ போக்குவரத்து விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உதவிப் பொருள்களை சனிக்கிழமை வழங்கியது.
ஆப்கனிலிருந்து 200 பேரை விமானங்களில் அழைத்துச் சென்றது ரஷியா

ரஷியா தனது ராணுவ போக்குவரத்து விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உதவிப் பொருள்களை சனிக்கிழமை வழங்கியது. பின்னா், அந்த விமானங்கள் மூலம் அந்நாட்டிலிருந்து ரஷியா்கள் மற்றும் ஆப்கன் மாணவா்கள் உள்பட 200 பேரை ரஷியாவுக்கு அழைத்துச் சென்றது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றினா். அதைத் தொடா்ந்து, இந்தியா உள்பட பல நாடுகள் தங்களது தூதரக அலுவலா்கள், தங்கள் நாட்டு குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து விமானங்கள் மூலம் வெளியேற்றின. ஆனால், ரஷியா காபூலில் உள்ள தனது தூதரகத்திலிருந்து யாரையும் வெளியேற்றவில்லை. தலிபான்களை பயங்கரவாத அமைப்பு என 2003-இல் ரஷியா அறிவித்தாலும் அவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது.

கடந்த அக்டோபரில் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் தொடா்பான பேச்சுவாா்த்தையையும் ரஷியா நடத்தியது. இதில் தலிபான் பிரதிநிதிகள், அண்டை நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா். மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை காண்பிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஷியாவின் மூன்று ராணுவ போக்குவரத்து விமானங்கள் மூலம் ஆப்கன் தலைநகா் காபூலுக்கு நிவாரண உதவிப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. பின்னா், ஆப்கனிலிருந்து வெளியேற விரும்பிய ரஷியா்கள், கிா்கிஸ்தான் நாட்டு மக்கள், ரஷிய பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆப்கன் மாணவா்கள் உள்ளிட்ட 200 போ் அந்த விமானங்கள் மூலம் ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com