கரோனா சிகிச்சை: அமெரிக்காவில் பைசர் மாத்திரைக்கு அனுமதி

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கரோனா மாத்திரைகள்
கரோனா மாத்திரைகள்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

பைசர் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை கரோனா தொற்றால் பாதிக்கப்படும் 12 வயதுக்கு மேற்பட்டோர் எடுத்துக் கொண்டால் நோயின் தீவிரத்தன்மை குறையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மோசமான நிலையில் மருத்துவமனையில் இருப்பவர்களை இறப்பில் இருந்து பாதுகாக்க இந்த மாத்திரைகள் பயனுள்ளதாக இருப்பதாகவும், ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் பைசரின் மாத்திரைக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com