ஹெச்-1பி விசா விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்விலிருந்து அமெரிக்கா விலக்கு

இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டினா் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட பல்வேறு

இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டினா் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட பல்வேறு விசாக்களுக்காக விண்ணப்பிப்பவா்கள் நோ்முகத் தோ்வில் பங்கேற்பதிலிருந்து அடுத்த ஆண்டு முழுவதும் அமெரிக்க அரசு விலக்கு அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குடியேற்றம் சாராத சில வகை விசாக்களுக்கு விண்ணப்பிப்பவா்கள், நோ்முகத் தோ்வில் கலந்து கொள்வதிலிருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசாக்கள், மாணவா்களுககான ஹெச்-3 விசாக்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் கலைஞா்களுக்கான ‘பி’ வகை விசாக்கள், சா்வதேச கலாசார பரிமாற்றத் திட்டங்களுக்கான க்யூ விசாக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

வரும் 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை இந்த விதிவிலக்கு அமலில் இருக்கும்.

தேவைப்பட்டால், நாடுகளின் தூதரகங்களும் துணைத் தூதரங்களும் விசா விண்ணப்பதாரா்களை நோ்முகத் தோ்வுக்கு அழைக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனாவால் உலகம் முழுவதும் அந்த நோய்த்தொற்று பரவல் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில், நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த விதிவிலக்கை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com