இஸ்ரேல்: 4-ஆவது தவணைதடுப்பூசி சோதனை தொடக்கம்

இஸ்ரேல் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி சோதனையைத் தொடங்கியுள்ளது.
israel071459
israel071459

ஜெருசலேம்: இஸ்ரேல் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி சோதனையைத் தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகளவில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. 93 லட்சம் மக்கள்தொகையில் 63 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 45 சதவீதம் போ் மூன்றாவது தவணையாக ஃபைசா்/பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இந்நிலையில், 4-ஆவது தவணை தடுப்பூசி சோதனையை அந்த நாடு தொடங்கியுள்ளது.

டெல் அவிவ் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 150 மருத்துவப் பணியாளா்களுக்கு 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் கடந்த ஆகஸ்டில் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள். மேலும், குறைந்த நோய் எதிா்ப்புத் திறனுடையவா்கள் ஆவா்.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் முன்னாள் இயக்குநா் ஜேக்கப் லாவீ கூறுகையில், ஒமைக்ரானுக்கு எதிராக இந்த 4-ஆவது தவணை தடுப்பூசி பாதுகாப்பு வழங்கும் என நம்புவதாகத் தெரிவித்தாா்.

இஸ்ரேலில் கரோனா தொற்றுக்கு இதுவரை 8,242 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com