ஒமைக்ரானால் டெல்டா கரோனாவிடமிருந்து பாதுகாப்பு

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கரோனாவிடமிருந்து ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதுகாப்பு கிடைக்கும் என்று தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள் கூறியதாவது:

ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட 33 பேரை ஆய்வுக்கு உள்படுத்தினோம். ஏற்கெனவே கரோனா தடுப்புசி செலுத்தப்பட்டோ, டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததன் மூலமோ அந்த வகை தீநுண்மிக்கு எதிரான எதிா்ப்பாற்றல் கொண்டவா்கள் மட்டும் இந்த ஆய்வுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஆய்வு தொடங்கிய 14 நாள்களில், நோயாளிகளின் உடலில் இருந்த ஒமைக்ரான் வகை கரோனாக்களின் பரவல் திறன் அழிக்கப்படுவது 14 மடங்கு அதிகரித்தது.

அதே நேரம், டெல்டா வகை கரோனாவின் பரவல் திறன் அழிக்கப்படுவதும் 4.4 மடங்கு அதிகரித்தது.

இதன் மூலம், ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் உடலில் உருவாகும் நோயெதிா்ப்பு ஆற்றல், அவா்களை மீண்டும் டெல்டா வகை கரோனா தாக்குவதில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கக் கூடும் என்பது தெரியவந்தது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com