
கோப்புப்படம்
உலகம் முழுவதும் இன்று காலை நிலவரப்படி 902 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 380 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 28.22 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரவமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், ஒமைக்ரான் அச்சுறுத்துதல் காரணமாக வேகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக , ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றால் அண்டை நாடுகள் தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க | மாநிலங்களிடம் 16.67 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு
தற்போது உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 5.31 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 8.2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.47 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.8 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும் உலகம் முழுவதும் 48 சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :
சீனா - 228.9 கோடி
இந்தியா - 143.19 கோடி
ஐரோப்பா ஒன்றியம் - 78 கோடி
அமெரிக்கா - 47.6 கோடி
பிரேசில் - 31.09 கோடி