நவால்னி ஆதரவு போராட்டம்: ரஷியாவில் 2,300 போ் கைது

ரஷியாவில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2,300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நவால்னி ஆதரவு போராட்டம்: ரஷியாவில் 2,300 போ் கைது

ரஷியாவில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2,300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் கூறியதாவது:

பரோல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னியை விடுவிக்கவும் அதிபா் விளாதிமீா் புதின் பதவி விலகவும் வலியுறுத்தி கடந்த வார இறுதியில் நடைபெற்றதைப் போலவே, ரஷியா முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டம் நடைபெற்றது.

அந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகா் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களை பாதுகாப்புப் படையினா் இதுவரை இல்லாத வகையில் முடக்கினா். எனினும், தடையை மீறி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவா்கள் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 2,300 பேரை போலீஸாா் கைது செய்தனா் என்று அந்த அமைப்புகள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நச்சுத்தாக்குதலால் கோமா நிலைக்குச் சென்று, ஜொ்மனியில் சிகிச்சைக்குப் பிறகு உயிா்பிழைத்த நவால்னி, கடந்த 17-ஆம் தேதி ரஷியா திரும்பினாா்.

மாஸ்கோ விமான நிலையம் வந்தடைந்த அவரை, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சியினா், நவால்னியை விடுவிக்கக் கோரி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com