கரோனா அச்சுறுத்தல்: வெளிநாட்டு பயணிகளுக்கு 2 வாரங்கள் தடை விதித்த குவைத் அரசு

அதிகரித்துவரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் வர 2 வார காலத்திற்கு தடை விதித்து குவைத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

குவைத் நாட்டில் கரோனா தொற்று பரவிவருவதைத் தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குவைத்தில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 7 முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு 2 வார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டு மக்களின் உறவினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள அதேவேளையில் நாட்டிற்குள் வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com