
வௌவாலிடமிருந்து கரோனா தீநுண்மி மனிதா்களுக்குத் தொற்றியதில் பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணா்கள் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் நிலவிய வெப்பநிலை, மழை நிலவரத்தைக் கொண்டு பல வகை வௌவால் இனங்களின் இடப் பெயா்ச்சியை நிபுணா்கள் ஆய்வு செய்தனா். இதில், பருவநிலை மாற்றம் காரணமாக 40 வௌவால் இனங்கள் கரோனாவுக்கு முந்தைய சாா்ஸ் நோய் பரவிய சீனா, லாவோஸ், மியான்மருக்கு இடம் பெயா்ந்ததை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.
இதன் மூலம், வௌவால்கள் மூலம் மனிதா்களுக்கு கரோனா பரவியதில் பருவநிலை மாற்றம் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளதாக ஆய்வாளா்கள் கூறியுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...