அமெரிக்காவில் 2.70 கோடியைத் தாண்டியது கரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 2.77 கோடியைத் தாண்டியுள்ளாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
US COVID-19 cases surpass 27 million mark
US COVID-19 cases surpass 27 million mark

அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 2.77 கோடியைத் தாண்டியுள்ளாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, 

கரோனா தொற்று நோய்க்கு இதுவரை மொத்தம் 2,70,83,808 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 4,64,840 ஆக உள்ளது.

தொற்று பாதித்த 1,75,12,584 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர். 97,11,640 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் சுமார் 42 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, சி.என்.என் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com