பிரேசிலில் ஒரேநாளில் 50 ஆயிரம் பேர் பாதிப்பு: 1,350 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,350 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
Brazil sees 1,350 COVID-19 deaths, over 50,000 cases in a day
Brazil sees 1,350 COVID-19 deaths, over 50,000 cases in a day

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,350 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டுச் சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில்,

கடந்த 24 மணி நேரத்தில் 51,486 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு 95,99,565 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 2,33,520 ஆகப் பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது.

நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ மாநிலம் தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 55,087 இறப்புகளும் 1,86,4,977 பாதிப்பும் பதிவாகியுள்ளது. 

தொடர்ச்சியாக 20 வது நாளாக தினசரி கரோனா பலி எண்ணிக்கை சராசரியாக 1,000க்கும் அதிகமானக பதிவாகியுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com