
கோப்புப்படம்
ஆர்ஜென்டினாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,739 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,01,034ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு மேலும் 109 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 49,674ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,53,240 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 17,98,120 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.