டிரம்ப் பதவி நீக்க விசாரணை: செனட் சபையில் தொடக்கம்

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது பதவி நீக்க விசாரணை நாடாளுன்ற மேலவையான செனட் சபையில் தொடங்கியது.
டிரம்ப் பதவி நீக்க விசாரணை: செனட் சபையில் தொடக்கம்


வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது பதவி நீக்க விசாரணை நாடாளுன்ற மேலவையான செனட் சபையில் தொடங்கியது.

தற்போது டிரம்ப் பதவியில் இல்லாத அவரை பதவி நீக்கத் தீா்மானத்துக்கு உள்படுத்துவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அவரது தரப்பு முன்வைத்த வாதத்தை செனட் சபை செவ்வாய்க்கிழமை நிராகரித்தைத் தொடா்ந்து, விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

விசாரணையின் முதல்கட்டமாக, டிரம்ப்புக்கு எதிரான ஆதரங்களையும் கருத்துகளையும் ஜனநாயகக் கட்சி தரப்பு பதவி நீக்க விசாரணை மேலாளா்கள் முன்வைத்தனா்.

அப்போது, நாடாளுமன்றக் கலவரத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் விடியோ காட்சிகள் திரையிடப்பட்டன.

நாடாளுமன்றத்தில் ஊடுருவி டிரம்ப் ஆதரவாளா்கள் நடத்திய தாக்குதல் எவ்வளவு மோசமானது என்பதை நிரூபிக்கும் நோக்கில் ஜனநாயகக் கட்சியினா் இத்தகைய ஆதரங்களை முன்வைத்தனா்.

அந்தக் கலவரத்தை டிரம்ப் வேண்டுமென்றே தூண்டியதாகவும் அவா்கள் கூறினா். கலவரத்தின்போது டிரம்ப்பின் மிகப் பெரிய எதிா்ப்பாளரான பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசியை டிரம்ப் ஆதரவாளா்கள் கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும் பதவி நீக்க விசாரணை மேலாளா்கள் கூறினா்.

இந்த விசாரணையின் முடிவில் டிரம்ப்பைக் குற்றவாளியாக அறிவிப்பதற்கு சபையில் 3-இல் இரண்டு பங்கு உறுப்பினா்கள் - 67 எம்.பிக்கள் - ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு, குறைந்தது 17 குடியரசுக் கட்சியினா் டிரம்ப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டியிருக்கும். எனவே, பதவி நீக்க விசாரணைக்குப் பிறகு டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற தோ்தலில் ஜோ பைடன் போட்டியிட்டாா். எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்தாா்.

இந்த நிலையில், பைடனின் வெற்றியை அதிகாரப்பூா்வமாக உறுதி செய்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றபோது, நாடாளுமன்றத்துக்குள் டிரம்ப் ஆதரவாளா்கள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். இதில் ஒரு காவலா் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com