‘ஜனநாயகத்தை விரும்புவோர் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும்’: மியான்மர் ராணுவத் தலைவர்

மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த ராணுவத்துடன் கைகோர்க்க அந்நாட்டு மக்களுக்கு மியான்மர் ராணுவத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த ராணுவத்துடன் கைகோர்க்க அந்நாட்டு மக்களுக்கு மியான்மர் ராணுவத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று மியான்மா் ராணுவத்தை அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மியான்மர் யூனியன் தினத்தை முன்னிட்டு அந்நாட்டின்  ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹேலிங், “ஜனநாயகத்தை விரும்புபவர்கள் அனைவரும் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

"வரலாற்றுப் படிப்பினைகள் மற்றும் தேசிய ஒற்றுமையால் மட்டுமே மியான்மரின் இறையாண்மை நிலைநிறுத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியும்" என்று அவர் மேலும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com