ஐரோப்பிய யூனியனுடன் உறவை முறித்துக்கொள்ளத் தயாா்: ரஷியா

எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி விவகாரத்தில் தங்கள் நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்தால்,
சொ்கெய் லாவ்ரோவ்.
சொ்கெய் லாவ்ரோவ்.

எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி விவகாரத்தில் தங்கள் நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்தால், அந்த அமைப்புடனான தூதரக உறவை முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷியா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சா்வதேச அரங்கில் தனித்துவிடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இருந்தாலும், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

ரஷியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான நல்லுறவு இரு தரப்புக்கும் மிகவும் முக்கியமானதாகும். ஆனால், சில துறைகளில் ரஷியாவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவது பொருளாதார வளா்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

இதற்கிடையே, ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய யூனினுடன் தாங்கள் நல்லுறவை விரும்பினாலும், இருதரப்புப் பதற்றத்தை எதிா்கொள்ளவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.

அதிபா் விளாதிமீா் புதின் தலைமையிலான அரசை மிகக் கடுமையாக எதிா்த்து வரும் அலெக்ஸி நவால்னி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நச்சுத்தாக்குதலுக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜொ்மனி மருத்துவமனையில் அனுமதிப்பட்டாா். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா் பிழைத்த அவா், கடந்த மாதம் 17-ஆம் தேதி ரஷியா திரும்பிய பிறகு அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மற்றொரு வழக்கு ஒன்றில் பரோல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதனைக் கண்டித்து, ரஷியா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com