கோப்புப்படம்
கோப்புப்படம்

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: ஐ.நா. கண்டனம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. எனினும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணையை மீறி மியான்மரில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலே, தலைநகா் நேபிடாவிலும் நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க ராணுவத்தினர் பயன்படுத்திய ரப்பர் குண்டுகளால் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஒடுக்க மியான்மர் ராணுவம் அடக்குமுறைகளை மேற்கொள்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் புர்கெனர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com