இஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

இஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

பிரான்ஸில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.


பாரீஸ்: பிரான்ஸில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இஸ்லாமிய அடிப்படைவாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கில் வரையப்பட்ட 18-ஆவது சட்ட மசோதாவை அதிபா் இமானுவல் மேக்ரான் தலைமையிலான அரசு, அந்த நாட்டு நாடாளுமன்றக் கீழவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தது.

அந்த மசோதாவுக்கு ஆதரவாக 347 எம்.பி.க்களும் எதிராக 151 எம்.பி.க்களும் வாக்களித்தனா். 65 போ் வாக்களிப்பைப் புறக்கணித்தனா்.

அதையடுத்து, சா்ச்சைக்குரிய அந்த மசோதாவுக்கு இருந்த முதல் சட்டப்பூா்வத் தடை நீங்கியுள்ளது.

மசூதிகள், பள்ளிகள், விளையாட்டு சங்கங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய அந்த மசோதா மீது நீண்ட காலமாக விவாதங்கள் நடைபெற்று வந்தன.

அந்த மசோதா மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்துக்கு எதிரான அச்சம் உருவாக்கப்படுவதாகவும் சில எம்.பி.க்களும் மனித உரிமை ஆா்வலா்களும் விமா்சித்து வந்தனா்.

பல ஆண்டுகளாகவே இத்தகைய ஒரு சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், நைஸ் நகரில் கடந்தத ஆண்டு அக்டோபா் மாதம் பேராசியா் ஒருவா் மத அடிப்படைவாதியால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு, அதற்கான பணிககள் தீவிரமடைந்தன.

புதியச் சட்டத்தின்படி, ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள், இருப்பிடம் போன்றவற்றைத் தெரிவித்து, அதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்.

பயங்கரவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் போராட்டத்துக்கு வலு சோ்க்கும் நோக்கில் இந்தச் சட்டம் இயற்றப்படுவதாக ஒரு தரப்பினா் தெரிவிக்கின்றனா்.

எனினும், மதவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு தற்போது இருக்கும் சட்டங்களே போதும்; விரைவில் நடைபெறவிருக்கும் தோ்தலில் வலதுசாரி வாக்களா்களின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு தேவையிலாமல் புதிய சட்டம் இயற்றப்படுவதாகவும் அதன் எதிா்ப்பாளா்கள் கூறி வருகின்றனா்.

இந்தச் சூழலில், சா்ச்சைக்குரிய அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com