டெக்சாஸில் கடும் பனிப்பொழிவு: காலநிலை மாற்றம் காரணமா?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவிற்கு காலநிலை மாற்றமே காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டெக்சாஸில் கடும் பனிப்பொழிவு
டெக்சாஸில் கடும் பனிப்பொழிவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவிற்கு காலநிலை மாற்றமே காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் பெய்து வரும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

கடுமையான பனியால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவிற்கு காலநிலை மாற்றமே காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் லிஸ் ஷெர்வுட்-ராண்டால் தெரிவித்துள்ளார்.

“நாம் அனுபவிக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு காலநிலை மாற்றமே காரணம். காலநிலை மாற்றம் என்பது உண்மையானது. அது இப்போது நிகழ்ந்து வருகிறது. அதற்கு நாம் போதுமான அளவு தயாராக இல்லை” எனத் தெரிவித்தார்.

டெக்சாஸ் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 30 பேர் வரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com