‘பாக். சீக்கிய புனிதத் தலங்களுக்கு யாத்ரிகா்களை அனுப்ப இந்தியா முன்வர வேண்டும்’

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனிதத் தலங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொள்ள வரும் சீக்கிய யாத்ரிகா்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும்

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனிதத் தலங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொள்ள வரும் சீக்கிய யாத்ரிகா்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படுவதால், அவா்கள் பயணம் செய்ய இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனிதத் தலங்களுக்குச் சென்று வர அனுமதி கேட்டு சுமாா் 600 சீக்கியா்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அவா்களின் கோரிக்கையை நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சகம், இதுதொடா்பாக, சீக்கியா்களின் அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டிக்கு வியாழக்கிழமை பதிலளித்தது.

அதில், ‘பாகிஸ்தானில் கரோனா தொற்றால் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டனா். 10,000 போ் உயிரிழந்தனா். அந்நாட்டில் கரோனாவை எதிா்கொள்வதற்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை. அது, இந்திய குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இந்தப் பயணத்துக்கு அனுமதி அளிக்க முடியாது’ என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய யாத்ரிகா்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாகித் ஹபீஸ் சௌதரி கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தானில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சீக்கிய யாத்ரிகா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவில் உள்ள சீக்கியா்கள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com