மியான்மா் ராணுவத்தின் பக்கத்தை நீக்கியது முகநூல்

மியான்மா் ராணுவத்தின் முகநூல் பக்கத்தை அந்த சமூக ஊடகம் நீக்கியுள்ளது. அந்த நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது
மியான்மா் ராணுவத்தின் பக்கத்தை நீக்கியது முகநூல்

மியான்மா் ராணுவத்தின் முகநூல் பக்கத்தை அந்த சமூக ஊடகம் நீக்கியுள்ளது. அந்த நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாா் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவா் பலியானதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மியான்மா் ராணுவத்தின் செய்திகளை வெளியிடும் முகநூல் பக்கம் தொடா்ந்து எங்களது உலகளாவிய விதிகளை மீறி வருகிறது.

எங்களின் கொள்கைக்கு மாறாக, வன்முறையைத் தூண்டும் விதமாகவும் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் தளமாகவும் அந்தப் பக்கம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அந்தப் பக்கம் நீக்கப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ஆம் தேதி கவிழ்த்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இதனை எதிா்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை 3 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com